---Advertisement---

தனுசு லக்னத்தில், கடக லக்னத்தில், மீன லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன் ?

On: March 5, 2026 1:20 PM
Follow Us:
தனுசு லக்னத்தில், கடக லக்னத்தில், மீன லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்

தனுசு லக்னத்தில், கடக லக்னத்தில், மீன லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன் ?

குரு ஆட்சி அடைவது தனுசு ராசி மற்றும் மீன ராசி

குரு உச்சம் பெறுவது கடக ராசி

கடக ராசி மற்றும் மீன ராசி இரண்டும் பெண் ராசிகள். இங்கு குரு சாத்வீகமான குணத்தை பெற்றிருப்பார். இதற்குக் காரணம் இந்த இரண்டு ராசிகளும் பெண் ராசிகள் மட்டும் இல்லாமல் இரண்டு ராசிகளும் நீர் ராசிகள்.

தனுசு ராசி. ஆண் ராசி. நெருப்பு ராசி. இங்கு குரு ஆட்சி பெறுவார். நெருப்பு தத்துவத்தில் செயல்படக்கூடியவர். சாத்வீகமான குணமும், அக்னி போன்ற கோபமான தன்மையும் கொண்டிருப்பவர்.

தனுசு ராசியில் சாத்வீக குணம் இருப்பதற்கு காரணம் இங்குதான் சுக்ரனின் நட்சத்திரம் உள்ளது. அதாவது தனுசு ராசியில் தான் பூராடம் நட்சத்திரம் உள்ளது.

தனுசு ராசியில் அக்னி போன்ற கோபமான தன்மை இருப்பதற்கு காரணம் இங்கு கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரமும், சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது.

சூரியன் சிவனின் அம்சம். சீரான கோபத்தை பெற்றிருப்பவர்கள்

ஆஞ்சநேயர் அவதரித்த நட்சத்திரம் மூலம் நட்சத்திரம். அதனால்தான் மூலம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடக்கக் கூடியவர்கள். உடனடியாக கோபத்தை அக்னி போன்று வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

மீன லக்னத்திலும், கடக லக்னத்திலும் குரு இருந்தால் இவர்களின் எதிரிகள் பணத்தை அதாவது தன்னுடைய தனத்தை, செல்வத்தை முழுவதுமாக இழக்க கூடியவர்கள்.

கடக லக்னத்தில் அவதரித்தவர் ஸ்ரீ ராமர்

ராமரின் ஜாதகத்தில் கடக லக்னத்தில் குரு இருக்கும். ராமருக்கும் ராவணனுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் ராவணன் தன்னுடைய தனத்தையும், செல்வத்தையும், படையையும் அனைத்தையும் இழந்திருப்பான். இங்கு இராவணன் நீண்ட யுத்தத்திற்கு பிறகு அனைத்தையும் இழந்து இறந்திருப்பான்.

தனுசு லக்னத்தில் அவதரித்தவர் பரசுராமர்

தனுசு லக்னத்தில் குரு இருந்தால் இவர்களின் எதிரிகள் பணத்தையும் அதாவது தன்னுடைய தனத்தையும், செல்வத்தையும் முழுவதுமாக இழப்பது மட்டுமில்லாமல், எதிரிகளும் வேகமாக அழிந்து விடுவார்கள்.

பரசுராமர் வரலாறையும் ஸ்ரீ ராமர் வரலாறையும் படித்தால் உங்களுக்கு புரியும்.

ஏன் லக்னத்தில் குரு இருப்பது இவ்வளவு சிறப்பு ?

லக்னத்தில் குரு இருந்தால் அவர் ஐந்தாம் இடத்தையும், ஏழாமிடத்தையும், ஒன்பதாம் இடத்தையும் பார்ப்பார்.

ஆறாம் இடம் என்பது எதிரிகளை குறிப்பிடும்.

ஆறாம் பாவகத்திற்கு ஏழாம் பாவகம் நிவர்த்தி ஸ்தானம்.

எட்டாமிடம் என்பது மறைமுக எதிரிகளை குறிப்பிடும்.

எட்டாம் பாவகத்திற்கு ஒன்பதாம் பாவகம் நிவர்த்தி ஸ்தானம்.

திரிகோணத்தை குரு பார்ப்பதால் இந்த சிறப்பு அதிகரிக்கிறது.

ஜோதிடம் வாழ்க்கையை மாற்றுமா ? (Will Astrology Change Life)

ஜாதகத்தை Pdf வடிவில் பெற ஆஸ்ட்ரோ சக்தியை தொடர்பு கொள்ளவும்.

WhatsApp

ஜோதிட தகவல்களின் களஞ்சியம்